கியூபெக்கில் கோவிட் -19 பொது பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காத ஒன்பது ''டாலராமா'' கடைகளுக்கு அபராதம் விதிப்பு..!!
கியூபெக்கின் பணியிட பாதுகாப்பு வாரியம் (சி.என்.இ.எஸ்.டி) வியாழக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் ''கேபிடேல்-நேஷனல், காஸ்பேசி, யமாஸ்கா, செயிண்ட்-ஜீன்-சுர்-ரிச்செலியூ, சாகுனே மற்றும் வாலிஃபீல்ட் பகுதிகளில் அமைந்துள்ள ஒன்பது டொலராமா கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பணியிட பாதுகாப்பு வாரியம் மீறல்கள் அல்லது அபராதங்களின் சரியான அளவு குறித்த விவரங்களை வழங்கவில்லை இருந்த போதும் அபராத தொகை 75 1,752 முதல் $ 3,502 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அபராதம் விதிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் குற்றம் நடந்தால், அபராதம் 14,000 வரை விதிக்கப்படலாம்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டொலராமா ஊடகஇணைப்பாளர் லைலா ராட்மானோவிச் "இந்த வழியில் எமது நிறுவனங்கள் இலக்கு வைக்கப்படுவதில் நாங்கள் மிகவும் ஆச்சரியப்படுகிறோம், மிகவும் ஏமாற்றமடைகிறோம், குறிப்பாக நாங்கள் சி.என்.இ.எஸ்.டி.யுடன் தொடர்ந்து தொடர்புகொள்கிறோம், கடந்த சில வாரங்களாக தொடர்சியாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.