மொன்றியலில் குழந்தை நல மருத்துவமனை அதிகாரிகள் - பெற்றோர்களுக்கு விசேட அறிவித்தல்..!!
2021-01-15 10:22
கியூபெக் செய்திகள்
கியூபெக்கின் COVID-19 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இரவு 8 மணி தொடக்கம் - அதிகாலை 5 மணிவரை நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அல்லது அவசர மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டால் அவர்களை பெற்றோர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துவர தயங்க வேண்டாம் என்று பெற்றோரை கேட்டுக்கொள்கிறார்கள்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சைன்ட்-ஜஸ்டின் மருத்துவமனையின் அவசர சேவைகளின் தலைவர் டாக்டர் அன்டோனியோ டி ஏஞ்சலோ,"அவசர சுகாதார பிரச்சினைகளுக்கு வருவதற்கு முன்பு பெற்றோர்கள் நீண்ட நேரம் குழந்தைகளை வீடுகளில் வைத்திருப்பதை தவிர்க்க நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக மிகச் சிறிய குழந்தைகளுக்கு அவர்களின் நிலை மிக விரைவாக மோசமடையக்கூடும். ஆகவே மிக விரைவாக வைத்தியசாலைக்கு அழைத்து வருவது மிகவும் பாதுகாப்பானது ”என்று தெரிவித்தார்.