கொரோனா காரணமாக, உலகம் முழுவதும் சுற்றுலா மற்றும் விமான சேவைகள் முடங்கியுள்ளன. இந்தச் சூழலை சமாளிக்கவே இந்தப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஏர் கனடா தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால், உலகப் பொருளாதாரம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப் பெரும் சரிவை கடந்த சில மாத காலங்களாகச் சந்தித்துவருகிறது. பெரும்பாலான நாடுகளில் விமான சேவை முற்றிலும் நிறுத்திவைக்க பட்டுள்ளது. ஒரே நேரத்தில் எல்லா நிறுவனங்களின் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், அந்தந்த விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்தும், தற்காலிகப் பணி நீக்கம் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றன.
அந்த வகையில் ஏர் கனடா நிறுவனம் புதன்கிழமை தனது திறனை 25 சதவீதம் குறைப்பதாக அறிவித்தது, இதன் விளைவாக விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 1,700 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.
இந்த அறிவிப்பானது இந்த வாரத்தில் கனேடிய விமான நிறுவனத்தினால் வெளியிடப்படும் இரண்டாவது அறிவிப்பாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை, கல்கரியை தளமாகக் கொண்ட வெஸ்ட்ஜெட் விமானத் துறையானது 1,000 ஊழியர்களால் குறைக்கப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கருது வெளியிட்ட ஏர் கனடாவின் நிர்வாக துணைத் தலைவர் லூசி கில்லெமெட், ஜனவரி 7 ஆம் தேதி புதிதாக நடைமுறைக்கு வந்தது,இதன் படி கனடா நாட்டிற்குள் நுழையும் எவரும் தங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எதிர்மறையான COVID-19 சோதனையைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த பயண விதிகள் காரணமாக நிறுவனத்தின் முன்பதிவுகளில் “உடனடி தாக்கத்தை” ஏற்படுத்தியுள்ளன என்றார்.
எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையால், ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.