+1 514-800-2610

யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் நிறுவப்படுமா..?

2021-01-11 10:30
இலங்கைச் செய்திகள்

2009ம் ஆண்டு நடைபெற்ற அவலத்தை பதிவு செய்யும் இந்த நினைவுத்தூணை திட்டமிட்டே இரவில் அகற்றியுள்ளனர். இதைக் கண்டித்தும் மீண்டும் நினைவுத்தூணை அதே இடத்தில் அமைக்க கோரி இரவிலும் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இலங்கைத் தமிழர்கள் சம உரிமைக்காகவும் தனி நாட்டிற்காகவும் கடந்த 2009-ம் ஆண்டுநடை பெற்ற இறுதிகட்டப் போர் நந்திக்கடல் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகளோடு முடிவிற்கு வந்தது. இந்த போரில் இலங்கை அரசின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள், குழந்தைகள், பெண்கள், பொது மக்கள் என சற்றேறக்குறைய 2 லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

வெள்ளைக்கோடி ஏந்தி சரணடைந்த போராளிகளும் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த இனப் படுகொலைக்கு நீதி கேட்டும் போர்க் குற்ற விசாரணை கோரியும் சர்வதேச அளவில் தமிழர்கள் போராடி வருகின்றனர். அதே நேரத்தில், தமிழர் பகுதிகளில் இப்போதும் சிங்கள ராணுவ கட்டுப்பாடும் அடக்குமுறைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்கிற குற்றச்சாட்டை நிருபிக்கும் வகையில் தற்போது ஒரு நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் யாழ்பாணம் மாவட்டத்தில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் அமைப்புகளால் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. உலக நாடுகளிடம் உதவி கேட்டு கைகளை ஏந்தி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவுத் தூணை கடந்த 08ம் தேதி இரவோடு இரவாக இடித்து அப்புறப்படுத்தினர். அண்மையில் நியமனம் பெற்ற சிங்கள ஆதரவு துணைவேந்தரால் இது நடைபெற்றுள்ளது.

2009ம் ஆண்டு நடைபெற்ற அவலத்தை பதிவு செய்யும் இந்த நினைவுத்தூணை திட்டமிட்டே இரவில் அகற்றியுள்ளனர். இதைக் கண்டித்தும் மீண்டும் நினைவுத்தூணை அதே இடத்தில் அமைக்க கோரி இரவிலும் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திய சில மணி நேரங்களில் இந்த இடிப்பு நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூணை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய மாணவ அமைப்புகளிடம் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் சற்குணராஜா உறுதியளித்தபடி, பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் அமைக்க மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கின. இதில், பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இருந்த போதும் இந்த நினைவுதூபி மீண்டும் நிறுவப்படுமா? என பொதுமக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் சந்தேகம் நிலவுகின்றது.இது தொடர்பாக கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழ சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இருந்த இடத்தில்:

1) ஒன்றும் வராது
அல்லது
2) சமாதானத் தூபி ('peace' monument) வரும் (பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் விருப்பம் இதுவே - அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையை பார்க்கவும்)
அல்லது
3) வெற்றித் தூபி வரும்
மூன்றாவது வரக் கூடாது என நான் பார்வதி சமேத பரமேஸ்வரனை இறைஞ்சுகிறேன். மேற்சொன்னவற்றில் (1) அல்லது (2) தான் நடக்கும்.
இன்று நாட்டப்பட்ட இரண்டு கற்களும் துணைவேந்தர் கோப்பாய் பொலிஸ் OIC க்கு சொன்ன மாதிரி அரசாங்கம் பதற்றத்தை தணிக்க சொன்னமையால் ('I was told to diffuse the tensions') அரங்கேறியது.
அவ்வளவே. சுபமஸ்து. லோகா சமஸ்தா சுகினோ பவந்து. என தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

 

துயர் பகிர்வு

தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada