அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற டிரம்ப் - வீட்டோ அதிகார முடிவை நிராகரித்த நாடாளுமன்றம்..!!
அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடைய உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டிரம்ப், அதற்கு பழி வாங்குவது போல் செயல்பட்டு வருவது, அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அவரது கட்சியினருக்கே, அவரது பிடிவாத போக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
அதிபர் தேர்தலில் (US Presidential Election) தோல்வி அடைந்ததன் காரணமாக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதா எதற்கும் ஒப்புதல் அளிக்க மனமில்லாமல், ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி, பழி வாங்குகிறாரோ என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
முன்னதாக, COVID-19 நிவாரண நிதிக்கான ஒப்புதலில் கையெழுத்திட மாட்டேன் என டிரம்ப் (Donald Trump) முரண்டு பிடித்தார். பின்னர் பல்வேறு நிலையில் அதிருப்தி எழுந்ததை அடுத்து, அதற்கு ஒரு வழியாக ஒப்புதல் அளித்தார்.

நிதி மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் பாதுகாப்பு படையினருக்கு, ஊதியம் முதல், பாதுகாப்பு துறை சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து செல்ல முடியும். அவர் இந்த மசோதாவை ரத்து செய்ததால், அமெரிக்க (America) ராணுவத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பித்து போகும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அமெரிக்க அதிபர் டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி எடுத்த முடிவை மாற்ற, நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அவர் எடுத்த முடிவை மாற்றுவதற்கு எடுத்த வாக்கெடுப்பில், டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே அவருக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் டிரம்ப் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ராணுவ நிதியை நிராகரித்து எடுத்த முடிவு 81-13 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டது.