பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா 60 வயதில் மாரடைப்பால் மரணம்..!!
அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வயது 60.இந்த நிலையில் டியாகோ மரடோனா மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று அவரது வழக்கறிஞர் புதன்கிழமை தெரிவித்தார்.
உலகிலேயே மிகச் சிறந்த கால்பந்து வீரர் என்று கொண்டாடப்பட்ட மரடோனா 4 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார்.1986 இல் மாரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி உலக கிண்ணத்தை வென்றது. அப்போட்டியின் சிறந்த வீரராகவும் தேர்வான அவர், அர்ஜென்டினா அணிக்காக 91 போட்டிகளில் விளையாடி 34 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவருடைய மரணம் விளையாட்டு அரங்கை அதிர வைத்துள்ளது.
60 வயதான மரடோனா சமீபத்தில் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடினார் மற்றும் பல வாரங்களுக்கு முன்பு ஒரு சப்டுரல் ஹீமாடோமாவிற்கு அவசர அறுவை சிகிச்சை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.